Transportr, ஒரு இலாப நோக்கமற்ற செயலி. உலகிலுள்ள பல்வேறு நாட்டில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை எளிமயாக்க பல்வேறு மக்களால் இது உருவாக்கப்பட்டது.
தற்சமயம் ஐரோப்பாவில் நன்றாக வேலை செய்கிறது.
நீங்கள் வசிக்கும் இடத்திலுள்ள பொது போக்குவரத்திற்கான ஆதரவு இதில் இல்லை என்றால் நீங்கள் அதனை இதில் சேர்க்க முயற்சிக்கலாம்.
அதற்கான வழிமுறைகள் யாவும் வலைதளத்தின் முகப்பக்கத்தில் உள்ளது.
Transportr, நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்தோ அல்லது இருக்கும் இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு வழிகளை கண்டு உதவுகிறது.
ஒரு பயணத்தின் விபரங்களை பிடித்தமானதாக அமைத்துக் கொண்டு, பின் ஒரே இழுவையில் மீண்டும் அதனை பெறலாம்.
நீங்கள் பயணித்த வழிகளை வரைபடத்திலும் கண்டு GPS மூலமாக நீங்கள் சென்று கொண்டிருப்பதையும் காணலாம்.
பேருந்தின் அடுத்த நிறுத்தங்கள், அருகிலுள்ள நிலையங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். ஏதேனும் தாமதம் இருந்தாலும் தெரிந்துக் கொள்ளலாம் (இருந்தால் மட்டும்).